எகிப்து தஹ்ரிர் சதுக்கத்தில் மோதல்;29 பேர் பலி - Sri Lanka Muslim

எகிப்து தஹ்ரிர் சதுக்கத்தில் மோதல்;29 பேர் பலி

Contributors

qout43

எகிப்து தலைநகரில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தோரிண் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது.

2011 ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை பதவி கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் முன்றாவது ஆண்டு நிறைவிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

கெய்ரோவின் தஹ்ரிர் சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்தர்ப்பாளர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.

இந’நிலையில் குறித்த நிகழ்வில்  மக்கள் அச்சமின்றி கலந்து கொள்ளலாம் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2011 ஆம் ஆண்டு  ஹொஸ்னி முபாரக் பதவி விலக வேண்டுமென முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டங்களின் 18 ஆவது நாளிலேயே முபாரக் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. (NF)

world-egypt-clashes_1-4-2014_132855_l

eg2  EGYPT-POLITICS-UNREST-DEMO

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team