எகிப்தைப் போன்று இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி! - Sri Lanka Muslim

எகிப்தைப் போன்று இலங்கை அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்கா சதி!

Contributors

qou150

-DC-

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

எகிப்தில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட அதே தந்திரோபாய நடவடிக்கையை இலங்கையிலும் அது முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க தூதரகத்தில் பல செயலமர்வுகள் நடந்துள்ளதற்கான செய்திகள் கசிந்துள்ளன.

 

இதனைத் திட்டமிட்டவர்கள் மற்றும் கலந்துகொண்டவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

 

தற்பொழுது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் உள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் வருகையைத் தொடர்ந்து தூதரகத்துக்கு எதிரான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மேல் மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி சிங்கள தேசிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team