எக்ஸ்பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அமிலக் கசிவு தொடர்பான மின்னஞ்சல் தகவல் அழிக்கப்பட்டதா..? - Sri Lanka Muslim

எக்ஸ்பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அமிலக் கசிவு தொடர்பான மின்னஞ்சல் தகவல் அழிக்கப்பட்டதா..?

Contributors

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் கடந்த மே மாதம் 21ஆம் திகதி தீப்பற்றியெரிந்த கப்பலின் பிரதான மாலுமியினால் கப்பலில் ஏற்பட்ட அமில கசிவு தொடர்பாக கப்பலுக்கு உரிமையுடைய வெளிநாட்டு நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதிக்கு அனுப்பிவைத்த மின்னஞ்சல் அழிக்கப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கப்பலில் தீ பரவுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே அதில் ஏற்றப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து நைட்ரிக் அமிலம் கசிவதை கப்பலின் கப்டன் உள்ளிட்ட பணியாளர்கள் அறிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கப்பல் தீப்பற்றி எரிவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நைட்ரிக் அமில கசிவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team