எங்களை நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள் ; வெளிநாட்டு உயர்ஸ்தானியர்களிடம் கதறும் பொதுபலசேனா - Sri Lanka Muslim

எங்களை நம்புங்கள் நாங்கள் நல்லவர்கள் ; வெளிநாட்டு உயர்ஸ்தானியர்களிடம் கதறும் பொதுபலசேனா

Contributors

பொதுபல சேனா அமைப்பு தொடர்பில் ஏற்பட்டிருக்கும் அபகீர்த்தியை போக்குவதற்கு தாம் முயற்சி செய்து வருவதாக அவ் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரவித்துள்ளார்.

 

பொதுபல சேனா அமைப்பு தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளிக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாகவும் அந்த அமைப்பின் நிறைவேற்று தெரவித்துள்ளார்.

 

நேற்றைய தினம் பொதுபல சேனாவின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

சர்வதேச ரீதியில் பொதுபல சேனா அமைப்பிற்கு ஏற்பட்டுள்ள அபகீர்த்தியை போக்கி, நன்மதிப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

 

இதன் முதல் கட்ட நடவடிக்கையாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய பிரதிநிதி, உயர்ஸ்தானிகர் ஆகியோருடன் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தமது அமைப்பு தொடர்பில் சில தரப்பினர் பிழையான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் குற்றம் சுமத்திய அவர், எதிர்வரும் நாட்களில் ஏனைய நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுடனும் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team