எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமியுங்கள் - கடும் மன உளைச்சலில் சிக்குண்டுளோம் - திருக்குமார் நடேசன் கோத்தபாயவிற்கு கடிதம்..! - Sri Lanka Muslim

எங்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமியுங்கள் – கடும் மன உளைச்சலில் சிக்குண்டுளோம் – திருக்குமார் நடேசன் கோத்தபாயவிற்கு கடிதம்..!

Contributors

பன்டோரா பேப்பரில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்குறித்து விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை நியமிக்கவேண்டும் என திருக்குமார் நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்தக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது

கடல்கடந்து பல வங்கிக்கணக்குகளை சொத்துக்களை வைத்துள்ள விவகாரத்தில் எனது பெயரும் எனது மனைவியின் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பன்டோரா பேப்பர் என தெரிவிக்கப்படும் ஆவணத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெயர் வெளியான நபர்கள் அனைவரும் தவறிழைத்துள்ளனர் என்ற பொதுவான கருத்து காணப்படுகின்றது. இம்ரான்கான் உட்பட பல உலக தலைவர்கள் பண்டோரா பேப்பரில் பெயர் வெளியானவர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளனர். நானும் எனது மனைவியும் அப்பாவிகள் எந்த தவறையும் செய்யவில்லை என நான் உங்களிற்கு உறுதியளிக்கின்றேன்.

இவ்வாறான சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு சுயாதீன விசாரணையாளரை தாமதமின்றி நியமிக்குமாறும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், இதன் மூலம் எங்களின் பெயர்களை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க முடியும். நானும் எனது மனைவியும் கடும் மனவேதனையை எதிர்கொண்டுள்ளதால் நான் உங்களிடம் இந்த வேண்டுகோளை விடுக்கின்றேன்.
எங்களைகுற்றவாளிகள் என கருதியுள்ளனர் இந்த தருணத்தில் நான் இந்த பணிவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

Web Design by Srilanka Muslims Web Team