எங்கே அவர்கள்? » Sri Lanka Muslim

எங்கே அவர்கள்?

ramadan2.jpg3

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

முனையூர் ஏ. ஸமட்

ரமழானை
ஆனந்தமாய் வரவேற்று
பள்ளிகளை
அழகுபடுத்திய – அந்த
அவர்கள் எங்கே?

அல்குர்ஆனை
ஒலியுயர்த்தி ஓதி
இறை இல்லங்களை
அதிர வைத்த – அந்த
அவர்கள் எங்கே?

உறக்கத்தை உதறியெறிந்து
நடுநிசியில் வல்ல அல்லாஹ்குவை
வணங்க
ஓடோடி வந்த – அந்த
அவர்கள்; எங்கே?

விழிகளையும் செவிகளையும்
இன்னும் அத்தனையுறுப்புக்களையும்
பாவப் பிணிகளிலிருந்து
பக்குவப்படுத்தி
பள்ளிகளில்
படுத்துறங்கிய – அந்த
அவர்கள் எங்கே?

ஏழையெளியோர்
பள்ளிப் படிகளில் நின்று
கரங்களை ஏந்திய வேளைகளில்
சுணக்கமின்றி
அள்ளிக் கொடுத்த – அந்த
அவர்கள் எங்கே?
எக்கோணம் நின்றபோதும்
பாங்கொலி கேட்கும் வேளை
பள்ளிவாசல்களை நோக்கி
படையெடுத்த – அந்த
அவர்கள் எங்கே?

நல்லவற்றைக் கேட்டு
நற்கருமங்களை
நல்லிதயங்களுடன்
போட்டியிட்டு ‘டைல்ஸ்கள்’ உடைய
சிரசைத்தாழ்த்தி
‘ஸுஜூது’ செய்த – அந்த
அவர்கள் எங்கே?
எங்கே எங்கே – அந்த
அவர்கள் எல்லாம் – என
பள்ளிவால்கள் தேடுகின்றன….
பெருநாள் பொழுதோடு
காணாமல் போன அவர்களை
காணாததனால்…!

அந்த அவர்கள் எல்லாம் – இனி
வரமாட்டார்கள்- அடுத்த
ரமழான் வரும் வரை – என்று
பள்ளிவாசல்களுக்கு
பதில் சொல்லப்படுகிறது – இன்னுமே
பள்ளிகளோடு
தொடர்பாய் உள்ளவர்களால்..!

Web Design by The Design Lanka