எங்கே சென்றார் சச்சின்? - Sri Lanka Muslim
Contributors

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

சாதனைகள் பல புரிந்த சச்சினின் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இளம் வீரர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சச்சின், மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜீனுடன் ஜாலியாக ஊர் சுற்றி கிளம்பி விட்டாராம்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான முசோரி, சச்சினுக்கு பிடித்தமான இடமாகும்.

பனியுடன் கூடிய இந்த மலைப்பகுதிக்கு, புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் குடும்பத்தினருடன் செல்வதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் சச்சின்.

கடந்தாண்டில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கூட இங்கு சென்று வந்தார்.

இங்கு குடும்ப நண்பரும், தொழில் பங்குதாரருமான சஞ்சய் நரங்கின் ஓட்டலில் தங்கி இருக்கும் சச்சின், ஒருவாரம் அங்கிருந்து பொழுதை கழித்துவிட்டு வருவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team