எச்சரிக்கை; சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ்! - Sri Lanka Muslim

எச்சரிக்கை; சிறுவர்கள் மத்தியில் பரவும் வைரஸ்!

Contributors

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுவதாகவும் இது ஒருவரிலிருந்து மற்றவருக்கு பரவக்கூடியது என்றும் எனினும் இது ஆட்கொல்லி நோயல்ல என்பதையும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை, அவ்வாறான சிறுவர்களை ஆரம்ப பாடசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அல்லது பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் நான்கு நாட்கள் அவர்கள் ஓய்வாக வீட்டில் இருப்பதற்கு வழி செய்யுமாறும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சிறுவர் மருத்துவம் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா:

ஹென்டிபுட்மவுன்ட் என்ற பெயரில் அறியப்பட்டுள்ள மேற்படி வைரஸ் காய்ச்சலானது சிறுவர்களுக்கு ஏற்படும் போது காய்ச்சலுடன் உடலில் சிவப்பு கொப்பளங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இக்காலங்களில் இந்த காய்ச்சல் கொழும்பு நகர் பகுதியில் வெகு வேகமாக பரவி வருவதாகவும்

இந்த வைரஸ் காய்ச்சல் மிக இலகுவாக சிறுவர்கள் மத்தியில் பரவி வருவதாகவும் ஒருவருக்கு ஒரு தடவை என்றில்லாமல் பல தடவைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு காய்ச்சல் ஏற்படும் சிறுவர்களுக்கு பரசிட்டமோல் வில்லை யை வழங்கி வீட்டிலேயே அவர்களுக்கு ஓய்வு பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காய்ச்சல் ஏற்படும் சில சிறுவர்களுக்கு நகம் கழன்று விடக் கூடிய அறிகுறிகள் உள்ளதாகவும் அவ்வாறு ஏற்பட்டால் அவற்றுக்கு மருந்துகளை எடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team