எச்.எம். பாயிஸின் ஜனாஸா இன்று (19) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. » Sri Lanka Muslim

எச்.எம். பாயிஸின் ஜனாஸா இன்று (19) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

ja99

Contributors
author image

A.S.M. Javid

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உதவிப் பொருளாலர் எச்.எம். பாயிஸின் ஜனாஸா நல்லடக்கத்தில் பெருந்திரலானோர் கலந்து கொண்டனர். மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் தனது 55வது வயதில் நேற்றிரவு (18) அவரது இல்லத்தில் வபாத்தானார்.

இவரின் ஜனாஸா தெமடகொட மாளிகாராம தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து குப்பியாவத்தை மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டு மாலை 4.15 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பெருந்திரலானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குப்பியாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை இடம் பெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் இரங்கள் உரையில் அவரது சேவைநலன்கள் பற்றியும், அவரின் மார்க்க ஒழுக்கங்கள் பற்றியும், தற்கால யுகத்தில் முஸ்லிம் சமுகத்திற்கு எதிராக இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்யான ஊடக அறிக்கைகளுக்கு அவ்வப்போது தகுந்த பதில்கள் வழங்குவது.

முஸ்லிம் சமுகம் அமைதியாகவும், பொறுமையாகவும் இருப்பது பற்றிய பதில் அறிக்கைகளையும், தெளிவுகளையும் ஊடக சமுகத்துடன் இணைந்து மும்மொழிகளிலும் அவர் ஆற்றிய சேவைகளையும் ஞாபகமூட்டியிருந்ததுடன் அவருக்கு ஈடேற்றம் கிடைக்கவும், அவரது குடும்பத்தினருக்கு துஆச் செய்யும்படியும் தலைவர் வேண்டியிருந்தார்.

ja-jpg2

Web Design by The Design Lanka