எண்ணெய் இறக்குமதிக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினை – சீனாவின் உதவியை நாடுகின்றது இலங்கை..! - Sri Lanka Muslim

எண்ணெய் இறக்குமதிக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் பிரச்சினை – சீனாவின் உதவியை நாடுகின்றது இலங்கை..!

Contributors

இலங்கை எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதால் நீண்டகால கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் உதயகம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.


ஆறுமாதகாலத்திற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனா தூதுவர் ஊடாக இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எண்ணெய் கொள்வனவிற்கான ஓமானிடமிருந்து 3.6 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கான முயற்சிகளிலும் இலங்கை ஈடுபட்டுள்ளது இதற்கான பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் உதயகம்மன்பில ஈடுபட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team