எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம் - சஜித்..! - Sri Lanka Muslim

எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம் – சஜித்..!

Contributors

எதிர்காலத்தில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவது நிச்சயம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எரிவாயு, பால்மா வரிசையோடு எரிபொருள் வரிசைக்கு அரசாங்கம் தயாராகிறதா?

பொது மக்களுக்கு அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களான எரிவாயு மற்றும் பால் மாவுக்கு நாடு முழுவதும் கடுமையான தட்டுப்பாடு உள்ளது என்றும் எரிவாயு பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசையில் கடைகளுக்கு அருகில் மக்கள் நிற்பதைக் காணலாம் என்றும் அதே போன்று பால்மா கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் நிற்பதைக் காணலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தோல்வி, இயலாமை, மறுபுறம், அமானுஷ்ய தன்மை, துன்மார்க்கம் மற்றும் அருவருப்பு ஆகியவற்றினை அரசாங்கம் ஒருவருட காலப்பகுதியில் நாட்டுக்கு வழங்கியுள்ளது.

“கொரோனா தொற்றுப் பேரழிவினால் கடும் நெருக்கடியில் வாழும் மக்கள் இப்போது உணவுகளை சமைக்கத் தேவையான எரிவாயுவைக் கூட இழந்து விட்டனர் என்றும் பால்மாவை தற்போது ஆடம்பரப் பொருளாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் குழந்தைகளுக்காகக் கடைகளிலிருந்து பால்மா கொஞ்சம்கூட பெற்றுக்கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, எரிவாயு நிறுவனங்கள் நஷ்டத்தால் எரிவாயு வியாபாரத்தை நடத்த முடியாது என்றும், அவர்களுக்கு மானியம் வழங்கவும் இழப்பை ஈடு செய்யவும் அரசிடம் பணம் இல்லை என்றும் அரசாங் கம் வந்தவுடன் தன்னிச்சையாகப் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கியமையால் 600 பில்லியன் ரூபாவை இழந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் தாங்க முடி யாத அளவுக்கு உயர்ந்துள்ளன என்றும் அரசாங்கம் இது குறித்து எந்தக் கவலையும்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team