எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ரணில் கலந்துரையாடல்! - Sri Lanka Muslim

எதிர்க்கட்சி எம்.பிக்களுடன் ரணில் கலந்துரையாடல்!

Contributors

 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆளுந்தரப்பு மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று (15) மாலை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.
நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை வழஙகினார்.
இதனைத் தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன் முன்வைக்க அனுமதிக்கும் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.
எதிர்க்கட்சி சார்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார வெல்கம, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team