எதிர்க் கட்சித் தலைவரின் அறையில் இருந்த விரியன் பாம்பு தொடர்பில் விசாரனை நடத்த கோரிக்கை - Sri Lanka Muslim

எதிர்க் கட்சித் தலைவரின் அறையில் இருந்த விரியன் பாம்பு தொடர்பில் விசாரனை நடத்த கோரிக்கை

Contributors

பாராளுமன்றத்திலுள்ள எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்திற்குள் பாம்பொன்று காணப்பட்டது தொடர்பில் எதிர்காலத்தில் கட்சித் தலைமைத்து வத்துக்கு வர உள்ள நபர்கள் தொடர்பில் ஐ. தே. க வுக்கு சந்தேகம் காணப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், எதிர்க் கட்சி தலைவரின் அலுவலகத்தில் இருந்து விரியன் பாம்பொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்துமாறு ஐ.தே.க சபாநாயகரிடம் கோரியுள்ளது.

ஆனால் கட்சியின் தலைமை பீடத்துக்கு வர ஆசைப்படுபவர்களே பாம்பை இட்டதாக சந்தேகிப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எமக்கு எதிர்க் கட்சி தலைவருக்கு அநியாயம் செய்ய எந்த தேவையும் கிடையாது என்றார். சஜித் பிரேமதாஸவை சுட்டிக்காட்டிய அமைச்சர் உங்களைப் பற்றித்தான் கட்சிக்கு சந்தேகம் உள்ளது அண்மையில் காட்டுப் பக்கம் சென்றாரா என வினவினார்.

Web Design by Srilanka Muslims Web Team