எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்படும் - சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே..! - Sri Lanka Muslim

எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு மீண்டும் திறக்கப்படும் – சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே..!

Contributors

முடக்கலின் போது கொரோனா தொற்றாளர்கள் மற்றும் இறப்புகள் குறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமையின் பின்னர் நாட்டை மீண்டும் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என இராஜாங்க
அமைச்சரான சுதர்ஷனி பெர்னாடோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


நோய் பரவுவதை கட்டுப்படுத்த நான்கு வார முடக்கல் போதுமானது அத்துடன் இந்த காலகட்டத்தில் கொவிட் இறப்பு மற்றும் நோய்த்தொற்றுகள் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


அடுத்த திங்கட்கிழமைக்குப் பின்னர் நாடு முடக்கப்படும் என தான் நினைக்கவில்லை. நாடு படிப்படியாக மீண்டும் திறக்கப்பட வேண்டும், கொவிட் உடன் ஒரு புதிய வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும், அதே நேரத்தில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தடுப்பூசி திட்டம் தொடர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.


தடுப்பூசிகள் கருவுறாமை மற்றும் பாலியல் செயலிழப்பை ஏற்படுத்தும் என்ற வதந்திகளை அமைச்சர் இதன் போது நிராகரித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team