எதிர் காலத்தில் பிரதேச அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே அரசியலின் எனது பிரவேசம் » Sri Lanka Muslim

எதிர் காலத்தில் பிரதேச அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே அரசியலின் எனது பிரவேசம்

DSC_0007 copy

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

எதிர்காலத்தில் சிறந்த பிரதேச முன்னெடுப்புக்களைக் கொண்டு பிரதேச அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே எனது இவ் வட்டாரத் தேர்தலின் புதிய அரசியல் பிரவேசம் என குறிஞ்சாக்கேணி வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஏ.எஸ்.யாமுஜீப் மக்களுடனான விசேட சந்திப்பின்போது தெரிவித்தார்.

எமது பிரதேசத்தில் பல இயற்கை வளங்கள் உட்பட இன்னும் பலவகையான வளங்களை இனங்கண்டு பிரதேசத்தையும் பிரதேச மக்களையும் பொருளாதார விருத்திக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பையும் பெற்று மக்கள்டைய பிரச்சினைகளுக்கான குறிப்பாக இளைஞர் யுவதிகளின் தொழில் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதும் எனது முக்கிய அரசியல் பிரவேசமாகும் கடந்த காலங்களில் எமது பிரதேச அபிவிருத்திகளில் வீதிகள் அமைத்தல் பொது அரச கட்டிடங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிப்பு செய்யப்பட்டதை யாவரும் அறிவோம் நான் சொல்லி நீங்கள் புரியவேண்டியதில்லை.

 எனவே எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெருவது உறுதியாகி விட்டது இவ் வெற்றி மக்களின் வெற்றியாகும் இவ் வெற்றிக்குப் பின் மற்றைய எனது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஊடாகவும் தலைமையின் கீழ் ஒன்று பட்டு தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்றுவேன் பொய்யான பிரச்சாரங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

 சமூக எழுச்சிக்கான போராட்டமே இந்த தேர்தல் இதனை விடுத்து சிலர் தங்களது சுய இலாபங்களுக்காக தங்களது சட்டை பக்கட்டுக்களை நிரப்ப அரசியல் இலாபம் தேடுகிறார்கள் தேர்தலுக்கு முன்பே ஊழலில் ஈடுபடுகிறார்கள் இரவோடு இரவாக மக்களுக்கு பொருட்களை வழங்குகிறார்கள் வாக்கின் பெறுமதி இப்போதுதான் இவர்களுக்கு தெரிகிறது சமூக எண்ணம் தெரியாதவர்கள் மக்களை தங்களது வாக்குகளை பெரும் நோக்கில் இரவோடு இரவாக விலை பேசுகின்ற பேசு பொருளாக மாறியுள்ளார்கள்.

இத்தனை விடயங்களையும் நாங்கள் முறியடித்து ஐக்கிய தேசிய கட்சி நூறு வீதமான வெற்றியை கண்டு கொள்ளும் என்பது எந்த வித சந்தேகமும் கிடையாது.எனக்கான இப் புதிய அரசியல் பிரவேசத்தில் மக்களுக்கான பொருளாதார முயற்சிகளையும் முன்னெடுப்பேன் என்னால் முடியாது போனால் பகிரங்கமாக அரசியலை விட்டு விலகுவேன் இருந்தாலும் அவ்வாறான இடங்களை விட்டுக் கொடுப்பதில்லை என்பதும் எனது ஏகோபித்த அரசியல் முடிவாகும்.

எமது பிரதேச கல்வி நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளது பொருளாதார ரீதியான பின்னடைவுகள் பல பின்னடைவுகளை எமது பிரதேசம் காலம் காலமாக கண்டு வருகிறது நாங்கள் வாக்களித்து வாக்களித்து ஏமாந்து விட்டோம் இனியும் எமது மக்கள் ஏமாறக் கூடாது ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்துவதன் ஊடாக பிரதேசத்தை மாத்திரமன்றி முழு மாவட்டத்தையும் அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம் சமூகத்தின் உயிர் நாடியாக நாங்கள் விளங்க வேண்டும் மற்றவர்கள் எம்மை தூசிக்கும் அளவுக்கு சோரம் போகக் கூடாது எனவே எங்களுடன் நேர்மையான வழிப் பயணத்தில் பங்கெடுங்கள் எனவும் மேலும் மக்களுடனான சந்திப்பில் அவர் தெரிவித்தா

Web Design by The Design Lanka