எந்தப் பிரச்சினைக்கும் பௌத்த தர்மத்தில் தீர்வு உண்டு: பிரதமர் டி.எம். ஜயரட்ன - Sri Lanka Muslim

எந்தப் பிரச்சினைக்கும் பௌத்த தர்மத்தில் தீர்வு உண்டு: பிரதமர் டி.எம். ஜயரட்ன

Contributors

உலகில் எந்த நாட்டில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றுக்கு பௌத்த தர்மத்தில் தீர்வு உண்டு என பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். உலகின் எல்லா நாடுகளிலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கு பௌத்த தர்மத்தின் ஊடாக தீர்வு வழங்க முடியும். இன்று தொழில்நுட்பம் விருத்தியடைந்துள்ளது.

கண்ணுக்கு புலப்படாத கிரகங்களுக்கு பயணிக்க முடியும். எனினும், இந்த எந்த தொழில்நுட்பத்தினாலும் மனிதரின் மனங்களை நல்வழிப்படுத்த முடியாது.

மனிதரின் மனங்களை நல்வழிபடுத்தும் ஆலோசனைகள் அடங்கிய ஒரே வழி பௌத்த தர்மமாகும்.

பௌத்த துறவிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.

எனினும், இதனைக் கேட்டு நாம் கலங்கி விடக் கூடாது, மத வழிபாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் குறைத்துவிடக் கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பினாங் தீவுகளில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team