எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் - மாலைதீவு - Sri Lanka Muslim

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் – மாலைதீவு

Contributors

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஆதரவு பெற்றுத்தரப்படும் என மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமின் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அப்துல்லா யாமின் நேற்று (22) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு மேலும் வலுப்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் சுகாதாரம், சுற்றுலா வியாபாரம், விமான சேவை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team