எனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தேன் - சந்திரிக்கா - Sri Lanka Muslim

எனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தேன் – சந்திரிக்கா

Contributors

தனது ஆட்சி காலத்தில் இராணுவ முனைப்புக்களை விட சமாதான வழிமுறைகளின் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளை அனுக முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 

பெங்களுரில் வாழும் கலை சார்பில் இடம்பெற்ற 6வது பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

போர் காலத்தின் போது சமாதானமும் அதேநேரம் அபிவிருத்தி போர் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுவதை தாம் உறுதி செய்துக்கொண்டதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

 

எப்போது விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

 

தமது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், தாம் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலைகளை திறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது ஆட்சியில் உள்ளவர் அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team