என்னை கொல்ல சதி’ – மங்கள சமரவீர » Sri Lanka Muslim

என்னை கொல்ல சதி’ – மங்கள சமரவீர

Contributors

தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர  பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விசேட உரை ஒன்றை ஆற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் இன்று பாராளுமன்றிற்கும் அறிவிப்பதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பதாக தன்னை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.அதன்மூலம் அரசாங்கத்தையும் சிக்கலுக்குள் தள்ள சதிக் கும்பல் முயற்சிப்பதாக மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, மங்கள சமரவீரவின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரே வகையான பாதுகாப்பை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார்.(lm)

Web Design by The Design Lanka