என் ஒரே மகனை இழக்க தயாரில்லை - சந்திரிக்கா வேதனை..! - Sri Lanka Muslim

என் ஒரே மகனை இழக்க தயாரில்லை – சந்திரிக்கா வேதனை..!

Contributors

எனது மகனை அரசியலுக்கு அழைத்து வர சதித்திட்டம் தீட்டுவதாக வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

அண்மையில் இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கப்பட்ட கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது மகன் அரசியலுக்கு பிரவேசிப்பார் என ஒருபோது கூறவில்லை.

நாட்டைக் காப்பாற்ற இளைஞர்கள் முன்வந்தால், தனது மகனும் தனது பங்களிப்பைச் செய்வார் என்றும், அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் கூறினார்.

“இந்த நாட்டு மக்களுக்காக நேர்மையாக பணியாற்ற முன்வந்து நாங்கள் நிறைய இழந்துவிட்டோம்.

சில சமூக பிரச்சினைகளுக்கு எதிராக நான் சமீபத்தில் குரல் எழுப்பிய பின்னர் எனது ஹொரகொல்லா குடியிருப்பை கூட இழக்க நேரிட்டுள்ளது.

நான் என் தந்தையையும், என் கணவனையும், என் கண்களில் ஒன்றையும் இழந்ததைப் போல, என் ஒரே மகனை இழக்க நான் விரும்பவில்லை, ”என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team