எப்போதும் கை கொடுக்கும் தோழன் பாகிஸ்தான் மஹிந்தானந்த..! - Sri Lanka Muslim

எப்போதும் கை கொடுக்கும் தோழன் பாகிஸ்தான் மஹிந்தானந்த..!

Contributors

தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் கை கொடுக்கும் தோழன் பாகிஸ்தான் என புகழ்ந்துரைத்துள்ளார் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

நேற்று முன் தினம் இரவு பாகிஸ்தான் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 81வது பாகிஸ்தான் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர், பாகிஸ்தானும் இலங்கையும் எப்போதும் நெருக்கமான,  பரஸ்பர  உறவுகளைப் பேணிவருகின்றன என்றும்  அவை பரந்த அடிப்படையிலான மற்றும் பன்முகத்தன்மை கொண்டவை என்றும் குறிப்பிட்டார்.

1948 ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் பிரதமர்  டி.எஸ்.சேனாநாயக்க, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த  போது  பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வலுவான சகோதரத்துவத்தின் அடித்தளம் அமைக்கப்பட்டதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற ) முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team