எமது இணையத்தின் டுபாய் வாசகர்களின் கவனத்திற்கு! » Sri Lanka Muslim

எமது இணையத்தின் டுபாய் வாசகர்களின் கவனத்திற்கு!

parking

Contributors
author image

World News Editorial Team

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினத்தையொட்டி வரும் செவ்வாய்க்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு துபாயில் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய அரபு அமீரகத்தின் 43வது தேசிய தின விடுமுறை, வரும் 2ம்தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரை நீள்கிறது. 7ம்தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அலுவல்கள் மீண்டும் தொடங்கும்.

 

செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நான்கு நாட்களுக்கு, துபாயில் மீன் மார்க்கெட், மல்டி-லெவல் பார்க்கிங் பகுதிகளை தவிற பிற பகுதிகளில் வாகனங்களை கட்டணமின்றி பார்க்கிங் செய்துகொள்ளலாம்.

 

இதேபோல துபாய் மெட்ரோ ரயில் சேவையும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில், கிரீன் லைன் மற்றும் ரெட் லைன் ஸ்டேஷன்கள், காலை 5.30 மணி முதல் இரவு 12 மணிவரை திறந்திருக்கும்.

 

வியாழக்கிழமை அதிகாலை 1 மணிவரை ஸ்டேஷன்கள் திறந்திருக்கும். செவ்வாய்முதல் வியாழன்வரை டிராம் வண்டிகள் காலை 6.30 மணி முதல் இரவு 1.30 மணிவரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka