எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம் » Sri Lanka Muslim

எமது சகோதரியின் உயிர் காக்க உதவிக்கரம் கொடுப்போம்

SDTG_5671

Contributors
author image

M.T. ஹைதர் அலி - செய்தியாளர்

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலாளர் பிரிவில் எல்லை வீதி, மீராவோடை – 04 எனும் முகவரியில் வசித்துவரும் 24 வயதுடைய அப்துல் மனாப் பாத்திமா இம்றானா எனும் சகோதரிக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மூன்று வயதுடைய பெண் குழந்தையின் தாயுமாவார்.

இவருக்கு இரு சிறுநீரகங்களும் செயழிலந்துள்ளதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் Dr. றுஸ்தி நிஸாம் கூறியுள்ளார்.

இச்சகோதரியை கொழும்பிலுள்ள வெஸ்டன் வைத்தியசாலையின் வைத்திய பேராசிரியர் Dr. றிஸ்வி செரீப் அவர்கள் பார்வையிட்டு வருகின்றார். (Western Hospital, 218, Cotta Road, Colombo – 08) இவரது இரு சிறுநீரகங்களையும் அறுவை சிகிச்சை செய்து மாற்றம் செய்வதற்கு ரூபா 40,0000/- (நாற்பது இலட்சம்) தேவையென வைத்தியர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது 24 வயதில் மூன்று வயது பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் இச்சகோதரியின் குடும்பத்தினரால் தனிமையில் இவ்வாறானதொரு பாரிய நிதியினை திறட்டுவதற்கு இவர்களால் இயலாத நிலையில் நல்லுள்ளங்கொண்ட நம்மை நாடி நிற்கின்றார்கள்.

பெண் சகோதரி என்பதால் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யவில்லை, தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் இச்சகோதரியின் உடல் ஆரோக்கியம் மாறுவதற்குள் இரண்டு மாதங்களுக்குள் (பெப்ரவரி – மார்ச்) அறுவை சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இச்சகோதரியின் உயிரைக்காக்க நம் அனைவராளும் முடியுமான நிதிகளை வழங்கி மூன்று வயதுடைய பெண் குழந்தையின் தாயின் உயிரை காப்பாற்ற உதவுவதுடன், இவருக்காக இறைவனிடத்தில் அனைவரும் பிரார்த்திப்போமாக.

தொடர்புகளுக்கு
சகோதரன் – 075 5680081, தந்தை – 071 9429278
வங்கி கணக்கு இலக்கம்

ஏ.எம். இஸ்ஸத்
112454492500,
சம்பத் வங்கி,
ஓட்டமாவடி.

SDTG_5671 SDTG_5672 SDTG_5674

Web Design by The Design Lanka