எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் புதைந்து கிடக்கின்றது அதனை நாம் புடம்போட்டு சீர்செய்ய வேண்டும் -எம்.ஐ.எம்.மன்சூர் - Sri Lanka Muslim

எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் புதைந்து கிடக்கின்றது அதனை நாம் புடம்போட்டு சீர்செய்ய வேண்டும் -எம்.ஐ.எம்.மன்சூர்

Contributors

-கல்முனை நிருபர்-
எமது மாணவர்களிடையே நல்ல திறமைகள் புதைந்து கிடக்கின்றது அதனை நாம் புடம்போட்டு சீர்செய்ய வேண்டும் அதனூடாகநல்ல ஒழுக்கமுள்ள கல்விச்சமுகத்தினூடாக எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கும் சாதனையாளர்களை நல்லதலைமைகளை உருவாக்கிக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

 
சம்மாந்துறை கல்வி வலயப் பிரிவுக்குட்பட்ட சது அறபா வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தபுலமையாளர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (08) பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல்தலைமையில் நடைபெற்றது.

 

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்துகையில் ஒரு பிள்ளையின் கல்வி வளர்ச்சியில் அதிபர் ஆசிரியர்கள் என்பவர்களின் பங்களிப்பு மாத்திரம் போதாதுபெற்றோர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.

 

 
nற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டோம். நமது பிள்ளை கல்வியை முழுமையாக பெற்றுவிடுவான் என்றுபாராமுகமாக இருந்து விட்டால்; அந்த ஆசைநிராகையாக ஆகிவிடும். நமது பிள்ளை பாடசாலைக்கு செல்கின்றான் அவன் சரியானமுறையில் கல்வியை கொண்டு செல்கின்றானா பாடசாலையில் சரியான முறையில் கல்வி போதிக்கப்படுகின்றதா சரியானதலைமைத்துவப்பண்புகள் ஒழுக்க விழுமியங்கள் முகாமைத்துவ செயற்பாடுகள் நடைபெறுகின்றனவா என்பது தொடர்பானஆய்வை பெற்றோர்கள் மெற்கொள்ள வேண்டும் அவ்வாறில்லாமல் பிள்ளையின் Nக்கில் விட்டுவிட்டால் பிள்ளையின் கல்விஎங்கோ சென்றுவிடும் அது பாரிய விளைவுகளையும் ஏற்படத்திவிடும் எனவேதான் பெற்றோர்கள் பிள்ளைகளின் கல்விவிடயத்தில் விளிப்படைய வேண்டும்.

 

 
சம்மாந்துறைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கல்வியில் எற்பட்ட வீழ்சியினை சீர் செய்து மீளக் கட்டியெழுப்பும் தூய தூரநோக்குடன் கட்சி பேதங்களை தூக்கி வீசிவிட்டு நான் உட்பட எமது மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், தவிசாளர்ஏ.எம்.எம்.நௌஷாட் அகியோர் ஒன்றினைந்துள்ளோம் இதற்க வலுச் சேர்க்கும் வகையில் எமது மக்கள் ஒன்றினைந்து எமதஊரின் கல்வி மற்றும் எனைய அபிவிருத்திகளில் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்என்றார்.

 

 

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர். தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட்இ உதவி தவிசாளர்ஏ.கலீலுர்றஹ்மான்இ கோட்டக் கல்விப் பணிப்பாளர்இ அட்டாளைசேனை கல்விக் கல்லூரியின்இ உபதலைவர் சத்தார் உட்படஅதிபர்கள் ஆசிரியர்கள் பலரும் கலந்த கொண்டனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team