எமதூரில் இலஞ்ச ஊழல்கள் பெருகிவருகின்றது - ஹிதாயத்துள்ளா நளீமி » Sri Lanka Muslim

எமதூரில் இலஞ்ச ஊழல்கள் பெருகிவருகின்றது – ஹிதாயத்துள்ளா நளீமி

FB_IMG_1502466621489

Contributors
author image

Hasfar A Haleem

கிண்ணியாவில் இன்று இலஞ்ச ஊழல்கள் பெருகிவருவதனை காணக்கூடியதாகவுள்ளது .

சுகாதார துறைகளிலும் இது பாரிய மோசடிகளை எம்மூரில் தோற்றுவித்துள்ளது.கிண்ணியா தளவைத்தியசாலையில் பல மில்லியன் கணக்கில் பெறுமதியான இயந்திரங்கள் தரம் குறைவாக இங்கு வழங்குப்பட்டுள்ளமையும் இதனுடைய பெறுமதி பல மில்லியன் ரூபாவாக காணப்படுகின்றதுஆனால் இங்குள்ள இயந்திரங்கள் தரமற்றவையாக வழங்கப்பட்டுள்ளது என்று நேற்று (11) மாலை கிண்ணியா நகர சபைமைதானனத்தில் இடம்பெற்ற கிண்ணியா தளவைத்தியசாலையை மத்தியரசின் கீழ் கொண்டுவருதல் தொடர்பான மக்கள் எழுச்சி கூட்டத்தில் சூறா சபையின் தலைவர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா நளீமி தெரிவித்தார்.

சுகாதார துறைகளில் மட்டும் இந்த ஊழல்கள் அல்ல பொதுவாக வீதியமைப்பு,கட்டிடங்கஅமைத்தத்தல் போன்ற பல துறைகளில் மோசடிகள் இடம்பெறுவதாகவும் இவ்வாறானவற்றை எமதூரில் கண்காணி்க்க நிறுவனமொன்றை அமைத்து அதனூடாக கட்டிடங்களை கண்காணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நாம் தயாராக வேண்டுமென்றும் மேலும் தெரிவித்தார்.கிண்ணியா தளவைத்தியசாலை மத்தியரசின் கீழ் கொண்டுவரப்படவேண்டுமென்பதை நாங்கள் நியாயபூர்வமாக கேட்கின்றோம் எங்களது உரிமைகளை நாங்கள் கேட்கின்றபோதிலும் இவ்வாறான முன்னெடுப்புக்களை தொடர்ந்தும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை ஓரிரு தினங்களில் அறிவிப்போம்.

இவ் வைத்தியசாலை தரமுயர்வு தொடர்பாக கடந்த 2009 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன .எனவே தங்களுடைய வைத்தியசாலை மத்தியரசின் கீழ் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது இந்த தரமுயர்வுக்கான முன்னெடுப்பில் அனைவரினதும் பங்களிப்பு அவசியமாகும் பொதுவாக இளைஞர்கள் அமைப்புக்கள்,சூறா சபை,உலமா சபை சிவில் நிறுவனங்களின் உதவி ஒத்தாசைகளுடன் எமது உரிமைகளை நாங்கள் இதனூடாக வென்றெடுக்க முடியுமெனவும் மேலும் தெரிவித்தார்.

இவ் மக்கள் எழுச்சி கூட்டத்தில் ஏற்பாட்டுக் குழுவின் மக்கள் அமைப்பின் தலைவர் எம். B.எம்.மஹ்தி,சூறா சபை உறுப்பினர்கள் ,உலமா சபை,பள்ளிவாசல்களின் சம்மேளம்,சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

FB_IMG_1502466573489 FB_IMG_1502466621489 FB_IMG_1502469165615

Web Design by The Design Lanka