எம் எஸ் சுபையிர் விடுத்துள்ள ஊடக அறிக்கை - Sri Lanka Muslim

எம் எஸ் சுபையிர் விடுத்துள்ள ஊடக அறிக்கை

Contributors
author image

றியாஸ் ஆதம்

இனவாத சக்திகளின் நெருக்கடிக்குள் சிக்கியுள்ள எமது கட்சியின் தலைமையை பாதுகாக்க ஒட்டுமொத்த வடபுல முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டுமென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.

 

 

வில்பத்து சம்மந்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீனுக்கு எதிராக சதிகார சில ஊடகங்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்பாக விடுத்த ஊடக அறிக்கையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

அவர் மேலும் தெரிவிக்கையில் வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் அதிகமாகக் குரல் கொடுத்து பல சவால்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் எமது கட்சியின் தலைமைக்கு எதிராக காழ்புணர்வு கொண்ட இனவாத தீய சக்திகளின் பின்னனியில் செயற்படும் சில ஊடகங்கள் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அண்மைக்காலமாக தாக்குதல்களை மேற்கொள்கின்றன. இவ்வாறு எமது தலைமைக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை தெளிவு படுத்தி எந்தவொரு வடபுல அரசியல்வாதிகளோ, சிவில் சமூகமோ குரல் கொடுக்காமை எமக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 
சில இனவாத அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது அண்மைக்காலமாக பல தாக்குதல்களை மேற்கொண்டன இந்தவேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை மாத்திரமே சமூகத்திற்காக தைரியமாக நின்று குரல் கொடுத்ததனை முழு சமூகமும் அறிந்த விடயமே.
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தங்களது வாழ்விடங்கள் மற்றும் சொத்துக்களை இழந்து அல்லல் படும் நிலமைகளை கருத்திற்கொண்ட எமது கட்சியின் தலைமை அம்மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்ற விடயத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அரச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பல மாநாடுகளை நடாத்தி வடபுல மக்களின் மீள் குடியேற்ற விடயத்தில் அதிக அக்கரை செலுத்தி வருகின்றார்.

 

குறிப்பாக ஜனாதிபதி செயலணி, வன பரிபாலன திணைக்களம், ஜீவராசிகள் திணைக்களம், காணி ஆணையாளர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் போன்றவர்களின் உதவியோடு காணிகளைப் பெற்றுக்கொடுத்து அவரது பணிகளைச் சரியாகச் செய்து வருகின்றார். இவ்வேளையில் சிலர் ஊடகங்களை பயன்படுத்தி எமது தலைமையினை அரசியலிருந்து ஓரங்கட்டுவதற்கு மக்கள் மத்தியில் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதுடன் வடபுல முஸ்லிம்களின் இயல்பு வாழ்கையை குழி தோன்டிப் புதைப்பதற்கும் முற்படுகின்றனர்.

 
வடபுல முஸ்லிம்களின் அகதி வாழ்க்கை பற்றியும் அவர்களது துன்பதுயரங்களையும் நன்கறிந்தவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் மாத்திரமே நமது மக்களுடைய பிரச்சிணைகளை தீர்ப்பதற்கு பலமான அரசியல் அதிகாரமே தேவை வடபுல மக்கள் அரசியல் அதிகாரத்தினை இழப்பீர்களானால் எதிர்வரும் காலங்களில் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியேற்படும். ஆகவே வடபுலத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் எமது தேசிய தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழியில் ஒன்று பட்டு எமது மண்ணயையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 
குறிப்பாக ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும் உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டும் இது தவிர்த்து ஊடக நிறுவனத்தின் தலைவரொருவர் தனக்கு ஐக்கிய தேசிய கட்சியில் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி தரவில்லை என்பதற்காக தனது ஊடகத்தினை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்க அவர்களை விமர்சித்த வரலாறும் எமக்கு தெரியும் அதே போன்று நுவரெலியா மாவட்டத்தில் ஊடகத்தின் மூலம் மக்களை ஏமாற்றி பாராளுமன்றம் சென்ற உறுப்பினர் ஒருவர் அந்த மக்களால் துரத்தியடிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் வன்னியிலே போட்டியிடுவதற்காக எமது கட்சியின் தலைமையை பலயீனப்படுத்தி அவரது இலக்கை அடைந்து கொள்வதற்காக ஊடகத்தினைப் பயன்படுத்திக் கொள்கின்றார்.

 

 

ஊடகங்களை ஆயுதமாகப் பயன்படுத்தி அரசியல் வாதிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் எமது கட்சியிலிருந்து வெளியேறிய துரோகிகளும் கைகோர்த்திருப்பதாக அறிய முடிகிறது இந்த விடயத்தில் வடபுல முஸ்லிம்கள் மிகக் கவனமாக செயற்பட வேண்டிய தருனமிது ஆகவே ஊடகங்ளை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றவர்கள் விடயத்தில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team