எம்.பி பதவியை துறந்துவிட்டு அமெரிக்கா பறக்க தயாராகும் பசில்? - Sri Lanka Muslim

எம்.பி பதவியை துறந்துவிட்டு அமெரிக்கா பறக்க தயாராகும் பசில்?

Contributors

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துவிட்டு, இந்த வார இறுதியில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பாராளுமுன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ, நாளை (9) தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும், நாளைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நம்பத்தகுந்த  வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை முற்பகல் 11 மணிக்கு பசில் ராஜபக்ஷ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னரே, அவர் தனது தேசியப் பட்டியல் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே நேரம் பஷில் ராஜபக்ச பதவி விலகினால் அவ்விடத்திற்கு நியமிக்கப்படவிரு‌ப்பதாக கூறப்படும் வர்த்தகர் தம்மிக்க பெரேராவிற்கும், பஷில் ராஜபக்சவுக்கும் இடையில் இன்று 8 ஆம் திகதி விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team