எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு - Sri Lanka Muslim

எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு

Contributors
author image

Editorial Team

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

 

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 5 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

 

ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, மின்சாரக் கட்டணங்கள் 25 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

ஊவா மாகாணசபையில் அரசாங்கம் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும் இதனால் திடீரென விலை குறைப்பு அறிவிக்கப்டப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

Web Design by Srilanka Muslims Web Team