எரிபொருள் வரிசையில் நின்றிருந்த பெண்கள் மாயம் - இடம்பெறும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள்..! - Sri Lanka Muslim

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த பெண்கள் மாயம் – இடம்பெறும் சமூக சீர்கேட்டு சம்பவங்கள்..!

Contributors
author image

Editorial Team

புத்தளத்தில் மூன்று பெண்கள் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வரிசைகளில் நின்றிருந்த பெண்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

 இரவு பகலாக காத்திருக்கும் பெண்கள்

புத்தளம் பிரதேசத்தில் பெற்றோலை பெற்றுக்கொள்வதற்காக பெண்கள் பலர் பகல் நேரத்தில் மாத்திரமல்லாது இரவு நேரத்திலும் வரிசைகளில் நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பெற்றோலை கொள்வனவு செய்ய சென்றிருந்த மூன்று பெண்களே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பெண் கணவனை ஏமாற்றி விட்டு வேறு ஒரு இளைஞனுடன் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சிலாபம் பிரதேசத்தில் இரவு நேரத்தில் எரிபொருள் வரிசையில் இருந்த பெண்ணொருவர் இளைஞர் ஒருவருடன் சில மணி நேரங்களை கழித்ததன் காரணமாக கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியைத் தாக்கிய கணவன்

வரிசையில் நின்றிருந்த கணவனை தந்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இரவில் வரிசையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டுக்கு சென்ற கணவன் எரிபொருள் வரிசைக்கு திரும்பி வந்து பார்த்த போது அங்கு மனைவி இருக்கவில்லை.

இதனையடுத்து தேடிப்பார்த்ததில் மனைவி, எரிபொருள் வரிசையில் இருந்த இளைஞர் ஒருவருடன் வேறுஓரிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த இடத்திற்கு சென்ற கணவன் மனைவியை தாக்கியுள்ளதுடன் எரிபொருளை கொள்வனவு செய்யாது வீட்டுக்குத் திரும்பிச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team