எரிபொருள் விலை ஏற்றத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது, பஷில் வந்ததும் தீர்வு கிட்டும் - எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை..! - Sri Lanka Muslim

எரிபொருள் விலை ஏற்றத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது, பஷில் வந்ததும் தீர்வு கிட்டும் – எஸ். பி திஸாநாயக்க நம்பிக்கை..!

Contributors

பொருளாதார காரணிகளை அடிப்படையாக கொண்டே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 மாத காலமாக எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவில்லை. எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருந்தால் பொருளாதார மட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கியதை தொடர்ந்தே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்ற விவகாரம் இன்று அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இவ்விடயம் குறித்து கட்சியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளன.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்க்கட்சியினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள். இது பயனற்ற செயற்பாடாகும்.

எரிபொருள் விலையேற்றத்தை அதிகரிக்கும் தீர்மானம் வலு சக்தி அமைச்சருக்கு கிடையாது என்பதை எதிர்தரப்பினர் நன்கு அறிவார்கள். அமைச்சரவை மட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்த முடியாது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team