எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா.?? - Sri Lanka Muslim
Contributors

(எம்.மனோசித்ரா)

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் எரிவாயு நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தினால் அது தொடர்பில் எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டது. எனினும் அது தொடர்பில் இறுதித் தீர்மானமெதுவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து முறையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், எரிபொருள் சட்டத்தில் எரிவாயு தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தோடு நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சட்டத்திலும் இது தொடர்பில் கூறப்பட்டுள்ளது.

அவற்றுக்கமைய எரிபொருள் அமைச்சினால் எரிவாயு அதிகரிப்பு தொடர்பில் தீர்மானமெதுவும் எடுக்கப்படவில்லை. எனினும் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Web Design by Srilanka Muslims Web Team