எரிவாயு விலை குறைவடையும் - லிட்ரோ! - Sri Lanka Muslim
Contributors

உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடுமென லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகள் குறைவடையலாம். இந்த விலைகுறைப்பு உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப முன்னெடுக்கப்படும். தற்போதைய காலக்கட்டத்தில் 12.5 கிலோ நிறை கொண்ட சமையல் எரிவாயுவுக்கான விலையை கணிசமான அளவு அதிகரித்திருக்க வேண்டும்.

எனினும், நுகர்வோர் நலன் கருதி பொறுப்புவாய்ந்த நிறுவனமென்ற வகையில் நட்டத்தையும் ஏற்றுக் கொண்டு 250 ரூபாவால் மாத்திரம் விலையை உயர்த்த தீர்மானித்தாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team