எலிகளை ஏவிவிடுங்கள்! (கவிதை) » Sri Lanka Muslim

எலிகளை ஏவிவிடுங்கள்! (கவிதை)

unnamed (1)

Contributors
author image

கலைமகன் பைரூஸ்

நறுமணம் கமழ வேண்டிய மொட்டு
நாதாரிகளின் கைபட்டதனால்
சின்னாபின்னமாக
யாரும் பேசுகின்ற பொருளாயிற்று

காஷ்மீரில் பிறந்த மொட்டு
துள்ளிகின்ற சிட்டு
நாதாரிகளினால் கசக்கப்பட்டு
உலகமே பேசுகின்ற பொருளாயிற்று!

ஆம்,
ஆஷிபா….
அநியாயம் என்றால் ஏது என்று
அறியாத பிஞ்சு மனத்தாள்…

மதப் பெருச்சாளியாலும்
காவல் பெருச்சாளியாலும்
காமுகப் பெருச்சாளியாலும்
மாறிமாறி கசக்கப்பட்டாள்…

அதுவும்
வேதம் உச்சாடணம் செய்யும்
உயரிய ஸ்தலத்தில் வைத்து
மனுஷன் மனுஷனாக இருக்க
வேதம் ஓதுவதாய் நடிக்கும்
வேசாதாரியால் ……
அவள்………???

ராம ராம என்று மந்திரம் ஓதும் வாயும்
பூஜை செய்யும் கரங்களும் அவளை
எழுபத்திரண்டு மணித்தியாலங்கள்
கோவிலுக்குள் அடைத்து
மாறிமாறி உருசிபார்த்திருக்கின்றது
குழந்தை என்பதையும் நினையாமல்…

பெண்களுக்கு
இந்த நாதாரி பற்றி நன்கு தெரியும்
பெண் என்றால் அவன் நாவிலிருந்து
உமிழ்நீர் நாயின் வாய் உமிழ்நீராய்
வழிந்தோடும்…
கன்னிகளை வேட்டையாடுவதில்
கண்ணும் கருத்துமாய் நிற்கும
வேஷாதாரி சஞ்சீவ் ராம்….

“பதவிகள்” இவர்கள் என்பதால்
அதுவும் இஸ்லாமியர்கள் என்பதால்
கருவறுக்க வேண்டும் என்று
வேண்டுமென்றே இந்த மலரை
கசக்கினார்கள் காடையர்கள்….

காவலாய் நிற்க வேண்டியவன்
தனக்கும் கசக்கிட உரிமம் கேட்ட
அம்மணச் செய்தியை சொல்வதில்
கைகள் பக்கவாதக் கைகளாக…

ஆஷிபாவைக் கசக்கிப் பிழிந்தவர்கள்
ஆறறிவற்றவர்கள் என்பதால்
ஆறறிவற்ற எலிகளை ஏவி
அவர்களின் ஆணுறுப்புக்களை
கடித்துக் குதறச் செய்திட வேண்டும்
அதுவும்
பொதுமன்றில் …

அதுவும் பசியோடுள்ள எலிகளை
ஏவியே தண்டனை
வழங்கிட வேண்டும்….

இன்று
இந்த எட்டு வயது ஆஷிபா
நாளை,
அதே கோயிலில்
கருவறையில் கருவறுக்கப்படுவாளோ?

இந்தக் காடையர்களுக்கு
கண்கள் மங்கலாகும் போது..
காமப்பசி தலைதூக்கும்போது
பாத்திமாவும், கலைவாணியும்
ஒன்றாகத்தான் தெரிவார்கள்…

அங்கே மார்க்கம் – இனம்
கேள்விக்குறியாகவே இருக்கும்….!

ஆஷிபாவை
படைத்தவன் பொறுப்பேற்பான்…

இந்த நாதாரிகளுக்குரிய
அழிவுநாளையும் அவனே
வெகுசீக்கிரம் குறிப்பான்!

எலிகளை ஏவிவிடுங்கள்…
அதுவும்
பசியோடிக்கின்ற எலிகளை
இந்த நாதாரிகளை
நிர்வாணமாக்கி
அவர்களிடம் ஏவிவிடுங்கள்…!

-கலைமகன் பைரூஸ்

14.04.2018

Web Design by The Design Lanka