ஏன் இந்த ஓரவஞ்சணை மிஸ்டர் நியூஸ் 1St ? - இது தானா ஒங்குட ஊடக சுதந்திரம்? » Sri Lanka Muslim

ஏன் இந்த ஓரவஞ்சணை மிஸ்டர் நியூஸ் 1St ? – இது தானா ஒங்குட ஊடக சுதந்திரம்?

ba

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Zafar Ahmed


ஒரு காணொளி வைரலாய் பரவிக் கொண்டு இருக்கிறது..பலரும் சிலாகித்துக் கொண்டாடுகிறார்கள்.சக்தி டீ வி இல் செய்தி அறிக்கை போய்க் கொண்டு இருக்கும் போது அனுபவமிகு ஊடகவியலாளர் ஜெப்ரி ஜெபதர்ஸன் அதிரடியாய் உள்ளே புகுந்து ‘மன்னிக்க வேண்டும்’ என்று கூறி முன்னாள் நிதியமைச்சர் பஷீல் ராஜபக்சவின் தோலை உரித்து உப்பு, மிளகு தடவுகிறார்.வார்த்தைகளில் எல்லாம் நைத்திரிக் அமிலம்…

இந்தக் கூத்தை இவர்களின் சிரஸ சிங்கள செய்தி அறிக்கையிலும் காணக் கிடைத்தது.அங்கேயும் செய்தி அறிக்கை போய்க் கொண்டு இருக்கும் போது மிகப் பெரும் பாவமன்னிப்பு பெக்கேஜ் உடன் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரொசான் வடவல உள்ளே புகுந்து கண்டபடி விளாசுகிறார்.எம் ரீ வீ ஆங்கில செய்தி அறிக்கையில் அப்படி எதுவும் இல்லை.

பஷிலின் போட்டோவை மட்டும் போட்டு வாங்கு வாங்குன்னு வாங்குகிறார்கள்.ஆங்கில செய்தி அறிக்கையில் மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சணை மிஸ்டர் நியூஸ் 1St ? அதில் ஏன் நியூஸ் போகும் போது உங்களது ஊடகவியலாளர் யானை கரும்புத் தோட்டத்துக்குள் புகுந்தது போல நுழையவில்லை ? சர்வதேச ஊடகவியலாளர்கள் யாராவது பார்த்தால் வெட்கம் வந்துவிடுமா?தமிழும் சிங்களுமும் மட்டும் உங்களுக்கு எப்போதும் இளக்காரமா ?

“அன்று தாமரைக் கோபுரத்தை அமைத்து சுனாமி வந்தாலும் எமது தொலை தொடர்பு சீர் குலையாமல் இருக்க அமைக்கப்பட இருந்த பொது மக்களுக்கு சொந்தமான அலைக்கற்றைகளை இந்த அரசு மகாராஜா நிறுவனத்திற்கு வழங்கி இருக்கிறது” என்று பஷில் ராஜபக்ச ஏதோ கூட்டம் ஒன்றில் சொல்லப் போக சிரசவுக்கு கண் மண் தெரியாத வெறி ஏற்பட்டு இருக்கிறது.இந்த விவகாரம் ஏற்கனவே இணையத்தளங்களில் வந்தது தான்.இதன் இழப்பு மட்டும் பல நூறு கோடி என்று எழுதிவிட்டார்கள்.

அரசியல்வாதியாக இதை பொது மேடையில் முதலில் சொல்லி இருப்பது பஷில்.இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் அளிப்பதைவிட்டு விட்டு பஷில் இதுவரை செய்த பெரும் பாவங்களின் பட்டியலை வழங்கிக் கொண்டு இருக்கிறது சிரஸ…

இது இந்த நாட்டின் ஊடக தாதாவுக்கும் கொமிஸ் தாதாவுக்கும் இடையிலான பனிப்போர்.பஷிலைப் பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. அது சிறையில் ஒரு நிமிசமும் வாழ முடியாத அபூர்வ உயிரினம். வழக்கு விசாரணைகளுக்கு மூச்சுத் திணறியபடி அம்புயூலன்ஸில் வரும். சிறையில் இருந்து திறந்துவிட்டால் மீனை தூக்கி தண்ணீரில் போட்ட மாதிரி இயல்பாகிவிடும்…

சிரச பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.சிரசவும் சச்சரவுகளும் போலீஸும் நீதிமன்றமும் மாதிரி.

அத்தனை பொருத்தம்..2000 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்த சிரச – சந்திரிக்கா சண்டை , சிரச – ஜேவிபி சண்டை, சிரச – விமல் வீரவன்ச சண்டை, எல்லாவற்றிலும் உச்சமாய் சிரச – மேர்வின் சில்வா சண்டை வெகு பிரபலம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மழைக் கால கோட் போல இருந்த சிரச 2010 பாராளுமன்றத் தேர்தலில் ரங்காவின் கட்சிக்கு தேசியபட்டியல் ஒதுக்காததால் ரணிலையும் சைட் டிஷ் இற்கு கரு ஜெயசூரியவையும் சில காலம் வைத்து செய்தது. இப்படி ஏகப்பட்டவை இருக்கின்றன..

கொஞ்ச காலம், கோல் பேஸில் நடக்கும் சீன அரசாங்கத்தின் போர்ட்சிட்டி அபிவிருத்தி திட்டத்தை கடுமையாக எதிர்த்தது. யாராவது வழிப்போக்கன் அந்தப்பக்கம் ஒன்னுக்கு போனால் கூட ப்ரேக்கிங் நியூஸ் என்று அலறியது. காதல் ஜோடிகளுக்குப் பயத்தில் ஜூரம் வந்தது. ஆனால் அதன் பின்னர் எந்த தேவதைகளின் கண்பட்டதோ தெரியவில்லை.போர்ட் சிட்டி நல்ல திட்டம் என்று கூறிக் கொண்டு ஏதோ ஒரு செங்கல்லைத் தூக்கிக் கொண்டு நாடு முழுவதும் போனது. உலக ஊடக சரித்திரத்தில் இது போன்ற காமெடி நடந்ததே இல்லை என்கிறார்கள் .

சிரசவுக்கு அனைத்தும் தெரியும் .அடுத்தவர்களின் பலவீனம் தான் சிரசவின் பலம். தனக்கு ஒத்துவராத பிரகிருதியாய் எவனாவது தலையெடுக்கும் போது அனைத்தையும் கக்கிவிடும். லேட்டஸ்டாய் பஷில் சிக்கி இருக்கிறது.

சிரசவைப் பற்றி தெரிந்து கொள்ள அதன் வரலாறுகளைப் புரட்டத் தேவை இல்லை. மின்னலில் ரங்கா பேசும் போது அவரது முகத்தைப் பத்து நிமிசம் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும். பரவசம் கிடைத்துவிடும்.

Video : https://www.facebook.com/265986223570334/videos/852157731619844/

basi

ba

Web Design by The Design Lanka