ஏன் நல்லவனான கொழுப்பு கெட்டவனாக மாற்றப்பட்டான்?? » Sri Lanka Muslim

ஏன் நல்லவனான கொழுப்பு கெட்டவனாக மாற்றப்பட்டான்??

fat

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா


பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் மாவுச்சத்து அடங்கிய குப்பைகளான பிஸ்கட்டுகள், பர்கர்கள்,பாஸ்தாக்கள், குளிர்பானங்கள் ,பிட்ஸாக்களை விற்றுத் தள்ள வேண்டுமானால்

மக்களிடம் கொழுப்பின் மீது பயத்தை உண்டு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.

ஆராய்ச்சியாளர்களுக்கு செல்வங்களைச் செலவு செய்து கொழுப்பு கெட்டது என்று தவறான பரிசோதனை முடிவுகளை வெளியடச்செய்தனர்.

இதெல்லாம் நடந்தது 1960 களில்.

அமெரிக்காகாரனும் ஐரோப்பாகாரனும் கிணற்றில் குதித்தால் அப்படியே கண்ணைக்கட்டி குட்டிகரணம் அடித்து பின்னால் குதிக்கப் பழக்கப்பட்ட நாம் அதை அப்படியே நம்பினோம்.
இப்போதும் நம்புகிறோம்

உணவுக்கு தானியங்களே (cereals) சிறந்தவை என்ற மாயபிம்பம் தோற்றுவிக்கப்பட்டது.

இச்செய்தி உலகம் முழுவதும் பரவியது .

அச்செய்தி பரவிய இந்த முப்பது வருடங்களில் உலகில் உடல் பருமனால்(obesity) அவதியுறுவோர் எண்ணிக்கை பட்டினியால் அல்லல்படும் மக்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்ற சாதனைக்கு வித்திட்டது.

இது சாதனையா??

ஆம். உலகில் வயிற்றுக்கு ஒரு வேளை உணவு கூட இல்லாமல் ஒரு கூட்டம் உயிர் விடுகிறது
இன்னொரு கூட்டம் வயிறு முட்ட முட்ட தின்றே உயிர்விடுகிறது.

இது வேதனை தரக்கூடிய விசயம்.

26 லட்சம் வருடங்களாக கொழுப்பைத்தின்று பழகிய நம் உடம்பு..
இந்த முப்பது வருடங்களில் உணவுச்சந்தையில் நடந்த பெரும் மாற்றங்களை தாங்க இயலாமல் தவிக்கிறது.

நம் முன்னோர்கள் தங்கள் வீடுகளில் செய்து வந்த நெய்/ வெண்ணெய்/ தேங்காய் எண்ணெய் இவையனைத்தும் தூரம் போய்
ரீபைன்டு ஆயில் என்ற அரக்கன் உள்ளே வந்தான்.

பனை வெல்லம் மட்டுமே பார்த்தறிந்தனர் நம் தாத்தா பாட்டிகள். நாம் இன்று அதை அழித்து “ரீபைன்டு சுகர்” ஆக்கிவிட்டோம்.

பாலில் உள்ள கொழுப்பு முழுவதும் நீக்கப்பட்டு கொழுப்பெடுத்த பால் (skimmed milk) விற்பனைக்கு வந்தது.

தரமான புரதச்சத்தும் கொழுப்பும் கொண்ட முட்டை தீண்டத்தகாத பொருளைப்போல் பார்க்கப்படுகிறது.

கறி/மீன் முதலியவை ஏதோ உடலுக்கு கேடு செய்யும் பொருட்கள் போல ஒரு போலித்தோற்றம் உண்டாக்கப்பட்டது. அப்படியே உண்டாலும் அதில் உள்ள தோல் உண்ணக்கூடாத பொருளானது. ஆனால் தோலின் அடிப்பகுதியில் தான் கொழுப்பே இருக்கிறது.

நல்ல கொழுப்புள்ள பாதாம் பிஸ்தா முதலிய கொட்டைகள் மக்களால் உண்ணப்பட்டாலும் மிகவும் குறைந்த அளவிலேயே உண்ணப்படுகின்றன.

இந்த கொழுப்பின் மீது நமக்கு ஏற்படுத்தப்பட்ட அச்சமானது
நமக்கு செய்த நன்மை தான் என்ன??

பணக்காரனுக்கும், அரச பரம்பரையினருக்கும் வந்த நீரிழிவு
நோய்/தொப்பை/உடல் பருமன் இப்போது விவசாயிக்கும் ஏழைகளுக்கும் வருகிறது .

மிடில் க்ளாஸ் மக்களுக்கோ சொல்லவே தேவையில்லை

கொழுப்பை வெறுத்த நாம்
பல தொற்றா நோய்களை அரவணைத்துக் கொண்டோம்
அதை அடுத்த தலைமுறைகளுக்கு பரிசாக வழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இயற்கையாக கிடைக்கும் அனைத்து கொழுப்புகளும் நல்ல கொழுப்புகள் தான்.

Web Design by The Design Lanka