ஏறாவூரில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌவிக்கும் விழா நாளை - Sri Lanka Muslim

ஏறாவூரில் சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌவிக்கும் விழா நாளை

Contributors

-எம்.எம்.ஏ.ஸமட்

 

வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தியூடான மனிதநேய சேவை அமைப்பினர்  ஏற்பாடு செய்துள்ள 2013ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டி கௌவிக்கும் விழா நாளை (30.8.2014) ஏறாவூர்; அல்-அஷ்ஹர் மகளிர் உயர்தரப் பாடசாலையில் நடைபெறவுள்ளது.

 

சாதனை படைப்போரை மேலும் சாதனை புரியச் செய்யவும் சாதனை படைக்கவுள்ளோரை ஊக்கப்படுத்தவுமென நடாத்தப்படும் இந்தப் பாராட்டு விழாவில் கிழக்கு மாகாண விவசாய, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

 

அவருடன், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர முதல்வர் அலிஸாகிர் மௌலானா பங்குகொள்ளவுள்ளதுடன், விஷேட அதிதிகளாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட். தாஜுடீன், சவுதி அரேபிய தூதரக மக்கள் தொடர்பாடல் அதிகாரி மாஹிர், வெளிவிவகார அமைச்சின் மரபுச்சீர்முறை அதிகாரி பௌஸ், ஏறாவூர் கல்வி வலயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர், பொலிஸ் நிலையப் பொறுப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், பாடசாலைச் சமூகத்தினர் என பலர் கலந்துகொள்ளவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்களான வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தியூடான மனிதநேய சேவை அமைப்பினர் தெரிவித்தனர்.

 

ஆத்துடன், இவ்விழாவில் கடந்த வருடம் க.பொத. சாதரண தரப்பரீட்சையில் பிரதேச மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற  20 மாணவ, மாணவிகள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது

Web Design by Srilanka Muslims Web Team