ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்கேன் இயந்திரம் - Sri Lanka Muslim

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்கேன் இயந்திரம்

Contributors

-எம்.எஸ்.எம்.ஸப்றாஸ்

 

ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அதி நவீன வசதிகளுடன் கூடிய ஸ்கேன் இயந்திரம் ஜப்பான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

 

இவ் ஸ்கேன் இயந்திரத்தின் மூலம் கற்பிணித்தாய்மார்கள் உட்பட, இருதய நோயாளிகளையும் பரிசோதிக்கும் வசதிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐம்பது இலட்சம் பெறுமதியான இவ் ஸ்கேன் இயந்திரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எந்தவெரு தனியார் வைத்தியசாலையிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்தின் நிதியில் இருந்து இப்பாரிய தொகை செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டு இருப்பது சங்கத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

 

ஏறாவூர் பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் கூட்டுறவு வைத்தியசாலையின் விடுதி, சத்திரசிகிச்சை அறை  என்பன  கடந்த ஆண்டு தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 4மில்லியன் ரூபா ஒதுக்கீட்டோடும், கூட்டுறவுச்சங்கத்தின் 6மில்லியன் ரூபா ஒதுக்கீட்டோடும் புதிய கட்டடத்தில் நிர்மானிக்கப்பட்டு முடிவடைந்துள்ளதான கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையாளர் தெரிவித்தார்.

 

இன்றைய தினம் கொள்வனவு செய்யப்பட்ட ஸ்கோன் இயந்திரத்தை பொருத்தும் பணிகள் நடைபெற்றபோது இந்நிகழ்வில் கூட்டுறவுச்சங்கத்தின் முகாமையாளரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எல்.ஏ.லத்திப், சங்கத்தின் தலைவரும் அதிபருமான எம்.பி.எம்.ஏ.சக்கூர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

06

 

07

 

08

 

09

 

10

Web Design by Srilanka Muslims Web Team