ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று » Sri Lanka Muslim

ஏறாவூர் YSSC,மருதமுனை ஒலிம்பிக் மோதும் அரை இறுதி ஆட்டம் இன்று

mu66

Contributors
author image

M.I.முபாறக் - சிரேஷ்ட ஊடகவியலாளர்

[எம்.ஐ.முபாறக்-ஊடகவியலாளர் ]


ஏறாவூர் YSSC விளையாட்டுக் கழகம் அதன் 45ஆவது ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாணரீதியில் நடாத்தும் மர்ஹூம் யூ.எல்.தாவூத் ஞாபகார்த்த சவால் கிண்ணம் மற்றும் மர்ஹூம் புஹாரி விதானையார் வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் முதலாவது அரை இறுதி ஆட்டம் YSSC மற்றும் மருதமுனை ஒலிம்பிக் அணிகளுக்கிடையில் இன்று ஞாயிறு பிற்பகல் 4 மணிக்கு ஏறாவூர் அஹம்மட் பரீத் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னதாக YSSC அணிக்கும் கல்முனை லக்கி ஸ்டார் அணிக்கும் இடையில் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் YSSC அணி 4-0 என்ற அடிப்படையில் கோல்களைப் போட்டு அரை இறுதி இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது.

அந்தப் போட்டியில் YSSC அணியின் சார்பில் எம்.முஷ்தாக் மூன்று கோல்களையும் வி.டி.மிர்ஸாத் ஒரு கோ லையும் அடித்து அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.இந்தச் சுற்றுப் போட்டிக்கு சரீப் அலி மன்றத்தின் தலைவர் வை.எல்.மன்சூர் அனுசரணை வழங்குகின்றார்.

mu66

Web Design by The Design Lanka