ஏழு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக சுல்தான் மரைக்கார் என்பவர் மீது குற்றச்சாட்டு? - Sri Lanka Muslim

ஏழு மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக சுல்தான் மரைக்கார் என்பவர் மீது குற்றச்சாட்டு?

Contributors
author image

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

வண்ணாத்திவில்லு பிரதேச சபையின் ஆளுங்கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) உறுப்பினரான முஸ்லிம் ஒருவரை பொலிஸார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 

ஏழு பாடசாலை மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்படவுள்ளார் என லங்கா சீ. நியுஸ் என்ற சிங்கள இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுல்தான் மரிக்கார் என்ற இந்தச் சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர், வண்ணாத்திவில்லு கரைத்தீவு முஸ்லிம் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஏழு மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

கல்விச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு இந்த மாணவர்கள் வெலிகமை பிரதேசத்துக்குச் சென்று கப்பல்துறை பள்ளிவாசலில் இரவு தங்கியிருந்த போது இந்தச் சந்தேக நபர் ஏழு மாணவர்களைப் பலமுறை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸாரை ஆதாரம் காட்டி இந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://lankacnews.com/sinhala/news/121971/

Web Design by Srilanka Muslims Web Team