ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நபரே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் – நியுசிலாந்து பிரதமர்..! - Sri Lanka Muslim

ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இலங்கையை சேர்ந்த நபரே கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டார் – நியுசிலாந்து பிரதமர்..!

Contributors

ஐந்து வருடங்களாக அவர் எங்கள் கண்காணிப்பிற்கு உரியவராக காணப்பட்டார் அந்த நபர் தாக்குதலை ஆரம்பித்து 60 செகன்ட்களில் கொல்லப்பட்டுவிட்டார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நியுசிலாந்தின் ஆக்லாந்தில் வணிகவளாகமொன்றில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இலங்கை பிரஜை என நியுசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டென் தெரிவித்துள்ளார்.


தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை பிரஜை – பத்து வருடங்களாக இங்கு வசிப்பவர் அவர் ஐஎஸ் அமைப்பின் தீவிரவாத கொள்கைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார் பொலிஸார் அவரை தொடர்ச்சியாக கண்காணித்து வந்தனர் என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.


ஒரு வன்முறை தீவிரவாதி அப்பாவி நியுசிலாந்து மக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளார். அவர் ஐஎஸ்ஐஎஸ் கொள்கையை ஆதரித்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடங்களாக அவர் எங்கள் கண்காணிப்பிற்கு உரியவராக காணப்பட்டார் அந்த நபர் தாக்குதலை ஆரம்பித்து 60 செகன்ட்களில் கொல்லப்பட்டுவிட்டார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அவர் பொருள்கொள்வனவிற்காகவே வணிகவளாகத்திற்கு சென்றுள்ளார் என பொலிஸார் கருதினார்கள் ஆனால் அவர் அங்கு கத்தியை வெளியில் எடுத்தார் என சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் அவரை கண்காணிப்பதற்காக அனைத்தையும் செய்தோம்,60 செகன்ட்களில் அவரை செயல் இழக்க செய்ய முடிந்தமை நாங்கள் அவரை எவ்வாறு உன்னிப்பாக அவதானித்தோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team