ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினம் » Sri Lanka Muslim

ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினம்

uae1.jpg2.jpg3.jpg6

Contributors
author image

A.S.M. Javid

ஐக்கிய அரபு இராட்சியத்தின் 43வது தேசிய தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐக்கிய இராட்சிய தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய தின நிகழ்வினை கொழும்பு ஹில்ட்டன் ஹோட்டலில் தூதரகத்தின் தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா தலைமையில் நேற்று (02) மாலை இடம் பெற்றது.

 

மேற்படி நிகழ்விற்கு அமைச்சர் டிலான் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அமைச்சர் பௌசி, மேல்மாகாண ஆளுநர் அஷ்ஷெய்யத் அலவி மௌலானா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஏனைய பல அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், தூதுவராலயங்களின் தூதுவர்கள் அதவற்றின் உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், ஊடக நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், மார்க்க அறிஞர்கள், புரவலர் ஹாசிம் உமர் என பலர் கலந்து கொண்டனர்.

 

இதன்போது தேசிய தினத்தை கொண்டாடு முகமாக தூதுவர் மற்றும் பிரதம அதிதியின் உரைகளைத் தொடர்ந்து பிரதம அதிதி அமைச்சர் டிலான் பெரேரா, தூதுவர் அப்துல் ஹமீட் ஏ.கே.எச். அல்முல்லா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரகா பண்டார நாயக்க ஆகியோரால் ஹேக் வெட்டி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

uae1

 

 

uae1.jpg2

 

 

 

uae1.jpg2.jpg3.jpg6

 

 

uae1.jpg2.jpg3.jpg9

 

 

uae1.jpg2.jpg3.jpg10

 

 

 

uae1.jpg2.jpg4

 

 

uae1.jpg2.jpg5

 

 

uae1.jpg2.jpg7

 

 

uae1.jpg2.jpg11

 

 

uae1.jpg2.jpg11.jpg12

 

uae1.jpg2.jpg3

Web Design by The Design Lanka