ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை மண்ணை அபிவிருத்தி செய்து வருகின்றது » Sri Lanka Muslim

ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின் ஊடாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை மண்ணை அபிவிருத்தி செய்து வருகின்றது

S.Naleem Sammanthurai

Contributors
author image

எம்.எம்.ஜபீர்

முஸ்லிம்களின் குரலாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்  தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப்  பிறந்த மண்ணில் அவரின் மறைவிற்கு பின்னர்  ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தின்  ஊடாக   ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சம்மாந்துறை மண்ணை அபிவிருத்தி செய்து வருகின்றது. பாரிய நகர அபிவிருத்திகளை முன்னெடுக்கும்  இந்த சந்தர்ப்பத்தினை நாம் தவற விட முடியாது  என   சம்மாந்துறை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் 9ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.நளீம் (ஜனாப்) தெரிவித்தார்.

சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், சம்மாந்துறை பிரதேசத்தின் மலையடி பிரதேச வட்டாரத்திலுள்ளவர்கள் கல்வி அறிவிலும், வாழ்வாதாரத்திலும் பின்தள்ளப்பட்டு காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் குறிப்பாக முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் பலமாக காணப்பட்டவர்கள் இந்த சம்மாந்துறை பிரதேச சபையை ஆட்சி செய்தவர்கள் எதனையும் மக்களுக்கு தீர்த்து வைக்கவில்லை. எனவே இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு அபிவிருத்திகளை செய்வதற்கு பல கோடிக்கணக்கான நிதிகளை வழங்கியுள்ள நிலையில் இதனை சரியான முறையில் அபிவிருத்தி செய்வதற்கு இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நல்லதொரு சந்தர்ப்பமாகும். ஆகையால் நாம் அனைவரும் ஒருமித்து எமது வாக்கு பலத்தினை நிரூபிக்க வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது.

மறைந்த பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபின் பிறந்த மண்ணில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை அழிப்பதற்காக பல்வேறு சக்திகள் இந்த மண்ணில் தேர்தலில் களம் இறங்கியுள்ளன. இதனை நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு தற்போதைய அரசாங்கத்தில் பலமான அமைச்சு கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறான ஒரு அமைச்சு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கடந்த அரசாங்கத்தில் கிடைக்கவில்லை. எதிர்வரும் 10ஆம் திகதி வெளிவரும் தேர்தல் முடிவுகள் சம்மாந்துறையின் அபிவிருத்திக்கான தேர்தல் முடிவுகளாகவே மாற்றுவீர்கள் என்று நம்புகின்றேன்.

கடந்த தேர்தலில் மயில் கட்சிக்கு அளித்த வாக்கினால்  கிடைத்த பயன் என்ன? அதற்கு அவர்கள் மக்களுக்கு பதில் அழிக்கவில்லை அடுத்த தேர்தலுக்கு வந்துள்ளனர். இது நீங்கள் சிந்திக்கும் நேரம் பிரயோசனம் அல்லாத கட்சிகளுக்கு உங்களுடைய வாக்குகளை அழித்து குப்பை கூடைக்குள் செல்லும் பெறுமதியற்ற வாக்குகளாக மாற்றிவிடாது யானை சின்னத்திற்கு  வாக்களிப்பதன் மூலம் எமது பிரதேசத்தினை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளர்களாக மேலும் வலுப்படுத்தி சம்மாந்துறையை  கட்டியெழுப்புவதுடன் எமது பிந்தங்கிய பிரதேசத்தினை அபிவிருத்தி செய்ய நாம் ஒருமித்து வாக்களிப்போம் எனவும் தெரிவித்தார்.

Web Design by The Design Lanka