ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் இலங்கை வரவுள்ளாரா..? - Sri Lanka Muslim

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் இலங்கை வரவுள்ளாரா..?

Contributors

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக அவர்களை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது என கூறினார். 

அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team