ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகளில் இந்தியா இலங்கையை கைவிடுமா? - Sri Lanka Muslim

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமர்வுகளில் இந்தியா இலங்கையை கைவிடுமா?

Contributors

qou147

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இம்முறையும் இந்தியா இலங்கையை கைவிட்டு விடக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா எதிர்க்கக் கூடிய சாத்தியங்கள் குறைவு என குறிப்பிடப்படுகிறது.

 

இந்தியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், தமிழகர் உணர்வுகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வகையிலும் தீர்மானங்கள் எடுக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் எவ்வாறான ஓர் நிலைப்பாட்டை எடுப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காலத்திலும் இந்தியா இவ்வாறான அறிவித்தல்களையே விடுத்துக் கொண்டிருந்துஇ இறுதி நேரத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்;.பிரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்துஇ அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்திருந்தார்.

 

பெரும்பாலும் இம்முறை அமர்வுகளிலும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Web Design by Srilanka Muslims Web Team