'ஐக்கிய மக்கள் சக்தியானது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை' - சம்பிக்க ரணவக்க! - Sri Lanka Muslim

‘ஐக்கிய மக்கள் சக்தியானது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை’ – சம்பிக்க ரணவக்க!

Contributors

ஐக்கிய மக்கள் சக்தியானது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும்  ஐக்கிய மக்கள் சக்தியில் இணையும் திட்டம் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தனது சுயாதீன அந்தஸ்தை நேற்று (08) அறிவித்ததன் பின்னர், தனது எதிர்காலத் திட்டங்களை அறிவிக்கும் வகையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குடும்பத்தை மையமாகக் கொண்ட கலாசாரத்துக்கு பதிலாக, உள்ளூர் நெறிமுறைகளை அங்கீகரித்த ஜனநாயக ஆட்சிக் கலாசாரத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியானது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரணவக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது சுயாதீன அந்தஸ்தை அறிவித்த பின்னர், எதிர்காலத்தில் கட்சி எடுக்கும் கொள்கை முடிவுகளை அவதானிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடைமுறை தீர்மானங்களுக்கும் ஆதரவளிக்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு தடையாக செயற்படுவதற்கு தமது பிரிவினருக்கு எந்த திட்டமும் இல்லை எனவும், ஆனால் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி பிரதமர் தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team