ஐக்கிய மக்கள் சக்தியின், ஒரு வருட பூர்த்தி விழா 15 ம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில்..! - Sri Lanka Muslim

ஐக்கிய மக்கள் சக்தியின், ஒரு வருட பூர்த்தி விழா 15 ம் திகதி ஹைட்பார்க் மைதானத்தில்..!

Contributors

இன்று (11) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம் பெற்ற விஷேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பொர்னான்டோ  ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு வருட பூர்த்தி விழா தொடர்பான விபரங்களை முன்வைத்தார்.

கட்சியின் ஒரு வருடப் பூர்த்தி விழா எதிர்வரும் 15.03.2021(திங்கட்கிழமை) பி.ப.02.30 மணி தொடக்கம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சுகாதார வழி முறைகளின் பிரகாரம் இடம் பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம் பெறும் இந் நிகழ்வில் சகல பதவி நிலை அங்கத்தவர்கள்,சர்வ மத தலைவர்கள்,பராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள்,வேட்பாளர்கள்,மாகாண சபை அங்கத்தவர்கள்,உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள்,கட்சியின் மகளிர் சக்தியின் பிரதிநிதிகள்,இளைஞர் சக்தியின் பிரதிநிதிகள், சர்வதேச பிரதிநிதிகள் உட்பட ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலிருந்தும் 20 அங்கத்தவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

சுகாதார பிரிவினர்களின் வழி காட்டல்கள் மற்றும் வேண்டு கோள்களின் அடிப்படையில் கோவிட் சட்ட திட்டங்களின் பிரகாரம் வரையறைகளுடன் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team