ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூமைப்பின் 8 தலைவர்களின் பதவி பறிபோயுள்ளது. - Sri Lanka Muslim

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூமைப்பின் 8 தலைவர்களின் பதவி பறிபோயுள்ளது.

Contributors

அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்ததை அடுத்து, இன்றுவரை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூமைப்பின் ட்டஅதிகாரத்திற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த, 8 தலைவர்களின் பதவி பறிபோயுள்ளது. 
இன்று கெஸ்பேவ நகரசபை, மாத்தறை பிரதேசசபை மற்றும் மதவாச்சி பிரதேசசபைகளின் வரவு செலவுத் திட்டங்கள் இரண்டாவது தடவையாகவும் தோல்வியடைந்தன.

கெஸ்பேவ நகரசபை வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவரும் இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

மேலும் மாத்தறை பிரதேசசபை வரவு செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளால் தோல்வியைத் தழுவியது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேசசபை உபதலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்களும், இதற்கு எதிராக வாக்களித்திருந்தனர்.

அத்துடன் மதவாச்சி பிரதேசசபை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆறு வாக்குகளும், ஆதரவாக மூன்று வாக்குகளும் கிடைத்தன. இதன்படி மூன்று மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தது.

பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நால்வர் இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பேலியகொட நகர சபை மற்றும் ராஜங்கனை, அளவ்வ, எம்பிலிபிடிய, மிரிஹான உள்ளிட்ட பிரதேச சபை வரவு செலவுத் திட்டங்களும் தோல்வியடைந்துள்ளமையால் அவற்றின் தலைவர்களும் பதவி விலக நேரிட்டுள்ளது.

இதேவேளை வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமை மற்றும் புதிய தலைவர்களை நியமித்தல் தொடர்பில் ஆராய மூவர் கொண்ட குழு ஒன்றை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி புதிய தலைவர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். (adatherana)

Web Design by Srilanka Muslims Web Team