ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா! - Sri Lanka Muslim

ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!

Contributors

ஐ.சி.சி இருபதுக்கு – 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில்  இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

சமீபத்தில் முடிவடைந்த இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின் இந்த அறிவிப்பு வெளியானது.

கடைசி ஒருநாள் ஆட்டம் தொடங்கும் முன், இலங்கை முதல் இடத்தில் நீடிக்க வேண்டுமானால், அந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலை இருந்தது. அதன்படி கடைசி ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்று தரவரிசையில் முதலிடத்தை உறுதி செய்தது.

இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் தென் ஆப்ரிக்க அணியும் நான்காமிடத்தில் பாகிஸ்தான் அணியும், ஐந்தாமிடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அங்கம் வகிக்கின்றன.

Web Design by Srilanka Muslims Web Team