ஐசிசி தரவரிசை: 20 இடங்களுக்குள் முன்னேற சச்சினுக்கு வாய்ப்பு - Sri Lanka Muslim

ஐசிசி தரவரிசை: 20 இடங்களுக்குள் முன்னேற சச்சினுக்கு வாய்ப்பு

Contributors

தனது கடைசி டெஸ்ட் தொடரை விளையாட உள்ள சச்சின், தரவரிசைப் பட்டியலில் 20 இடங்களுக்குள் முன்னேற வாய்ப்புள்ளது.

டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தை முதன் முதலாக 1994-ம் ஆண்டு பிடித்தார். அப்போது, முதலிடத்தில் இருந்த பிரையன் லாராவை சச்சின் பின்னுக்குத் தள்ளினார்.

தற்போது, சச்சின் 632 புள்ளிகளுடன் 24-ம் இடத்தில் உள்ளார். 22-ம் இடத்தில் 634 புள்ளிகளுடன் விராட் கோலியும், பிராவோவும் உள்ளனர். 20-ம் இடத்தில் 637 புள்ளிகளுடன் தோனியும், கெய்லும் உள்ளனர். எனவே, மேலும் 7 புள்ளிகளை சச்சின் பெறும் பட்சத்தில் மீண்டும் 20-வது இடத்துக்கு அவர் முன்னேறுவார்.

சச்சின், தனது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை (1994-நவம்பர், 1998-மார்ச், 2000-மே, 2002-ஜனவரி, அக்டோர்-2010) முதலிடத்தில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team