ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை! பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு! - Sri Lanka Muslim

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை! பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் அறிவிப்பு!

Contributors

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரில் பரீட்சைக்கு தோற்றி சித்தி பெற்றுள்ள மாணவர்களை தரம் 6ம் ஆண்டில் பாடசாலைக்கு அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உயர்தர பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் பின்வருமாறு,

கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரி – 186

கண்டி தர்மராஜா கல்லூரி – 184

கொழும்பு முஸ்லிம் பெண்கள் பாடசாலை – 175

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி – 167

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – 164

வேம்படி மகளிர் கல்லூரி – 163

கொக்குவில் இந்துக் கல்லூரி – 162

இதேவேளை, க.பொ.த உயர்தர மாணவர்களின் பெறுபேறுகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னர் வெளியிடப்படுமெனவும் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.(lw)

Web Design by Srilanka Muslims Web Team